தமிழ் (tamiḻ)
விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவைகளுக்கான 2025 ஆம் ஆண்டின் (19-வது வருட) ஸ்டீவி® விருதுகளுக்கான பரிந்துரைகளை வழங்க உங்களது நிறுவனத்தை நாங்கள் அழைக்கின்றோம். வாடிக்கையாளர் சேவை, வணிக மேம்பாடு மற்றும் விற்பனை வல்லுனர்களுக்கான உலகின் முதன்மையான வணிக விருது மதிப்புமிக்க சர்வதேச வணிக விருதுகள்® மற்றும் அமெரிக்க வணிக விருதுகள்® ஆகிய நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.
உங்களது மின்னஞ்சல் முகவரியை இங்கே சமர்ப்பித்தால், உங்களது பரிந்துரைகளை எவ்வாறு தயார்செய்வது மற்றும் சமர்ப்பிப்பது தொடர்பான அனைத்துத் தகவல்களும் அடங்கிய நுழைவுத் தகவல் பட்டியலை மின்னஞ்சலில் அனுப்புகிறோம். மிகவும் பாதுகாப்பான தனியுரிமைக் காப்புமுறையை நாங்கள் பின்பற்றுவதால், எக்காரணம் கொண்டும் உங்களது மின்னஞ்சல் முகவரி வேறு யாரிடமும் பகிரப்படாது.
இந்தத் தளத்தின் இந்தப்பக்கம் மட்டுமே இந்த மொழியில் நீங்கள் காணமுடியும். நுழைவுத் தகவல்பட்டியல் உட்பட, மற்ற பக்கங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும். இதற்குக் காரணம், பரிந்துரைகள் ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், சர்வதேச அளவில் தொழில் வல்லுநர்கள் மதிப்பிடும் செயலோட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவுமே
விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவைகளுக்கான இந்த ஸ்டீவி விருதானது வாடிக்கையாளர் சேவை, தொடர்பு மையம், வணிக மேம்பாடு மற்றும் விற்பனை வல்லுனர்கள் ஆகியர்வர்களில் உலகளவில் தலைசிறந்தவர் யார் என்பதை அடையாளம் காணும் நோக்கில் வழங்கப்படுகிறது. ஸ்டீவி விருதுகளை வழங்கும் இந்த அமைப்பானது, அமெரிக்காவில் அமைத்துள்ளது. இந்த அமைப்புதான் எட்டு வெவ்வேறு ஸ்டீவி விருதுகளை தகுந்த போட்டியாளர்களுக்கு வழங்குகிறது, நீங்கள் இதைபற்றி www.StevieAwards.com இல் அறிந்து கொள்ளலாம். இந்த ஸ்டீவி விருது கோப்பை உலகின் மிகவும் பாராட்டப்பட்ட பரிசுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் லாஸ் வேகஸ்-இல் உள்ள, நெவாடா நகரில் அமெரிக்காவில் நடைப்பெற்ற ஒரு கலை நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு இந்த விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவைகளுக்கான ஸ்டீவி விருது வழங்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டின் வெற்றியாளர்களின் பட்டியலைக் காண இங்கு கிளிக் செய்யவும்
விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவைகளுக்கான விருதுகளில் பல்வேறு விருது வகைகளைத் தேர்வுசெய்யலாம். நீங்கள் பங்கேற்க வேண்டுமானால், உங்களது நிறுவனம் எந்தச் சாதனைகளுக்கான அங்கீகாரத்தை எதிர்நோக்குகிறதோ அதற்குப் பொருத்தமான பிரிவுகளைத் தேர்வுசெய்து, அந்த பிரிவுகளுக்கான உங்களது பரிந்துரைகளை அறிவுறுத்தப்பட்டபடி தயாரிக்கவும். பிரிவுகள் கீழே:
- விற்பனைகளுக்கான
- தனிநபர் விற்பனைகளுக்கான
- குழு விற்பனைகளுக்கான
- விற்பனை சாதனைகளுக்கான
- விற்பனை தனிச்சிறப்பிற்கான
- வாடிக்கையாளர் சேவை மற்றும் தொடர்பு மையத்திற்கான
- தனிநபர் வாடிக்கையாளர் சேவை மற்றும் தொடர்பு மையத்திற்கான
- குழு வாடிக்கையாளர் சேவை மற்றும் தொடர்பு மையத்திற்கான
- வாடிக்கையாளர் சேவை மற்றும் தொடர்பு மையத்தின் சாதனைகளுக்கான
- வாடிக்கையாளர் சேவை துறைக்கான
- வாடிக்கையாளர் சேவையின் வெற்றிக்கான
- புதிய தயாரிப்பு மற்றும் சேவைக்கான
- தீர்வு வழங்குநர்களுக்கான
- வணிக மேம்பாட்டிற்கான
ஒவ்வொரு பிரிவுகளின் பட்டியல் மற்றும் விளக்கங்கள் நுழைவு கிட்-இல் உள்ளது.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தகுதிக்கான காலகட்டத்தில் விண்ணப்பதாரரின் சாதனைகளை விளக்கும் 650 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத்துமூலமான கட்டுரை அல்லது அவ்வாறே விளக்கக்கூடிய ஐந்து (5) நிடமிங்கள் இயங்கக்கூடிய ஒரு காணொளி அவசியம். ஒரு விண்ணப்பதாரர் தனிநபராகவோ, ஒரு குழுவாகவோ, ஒரு புதிய பொருள் அல்லது சேவையாகவோ அல்லது ஒரு முழு அமைப்பாகவோ இருக்கலாம்.
விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவுகளில் 2025 ஸ்டீவி விருதுகள் மார்ச் 6 அன்று அறிவிக்கப்படும். ஏப்ரல் 10 ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறும் விழாவில் வெற்றியாளர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள். வெற்றியாளர்கள் விழாவில் கலந்து கொள்ளத் தேவையில்லை.
இந்த ஸ்டீவி விருதுகள் பல நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது. இந்த பிரதிநிதிகள் தகவல்களை நிறுவனங்களுக்கு பகிர்ந்தளித்து விருதுகளில் பங்கேற்ப உதவுவார்கள். உங்களது நாட்டில் பிரதிநிதிகள் யாரேனும் உள்ளனரா என்பதை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
அமைப்பாளர்களை பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்
The Stevie Awards
10560 Main Street, Suite 519
Fairfax, Virginia 22030, USA
தொலைபேசி: +1 703-547-8389
தொலைநகல்: +1 703-991-2397
மின்னஞ்சல்: help@stevieawards.com