தமிழ் (tamil)
வணிக நிறுவனத்திலுள்ள பெண்களுக்கான 2025 ஆம் ஆண்டின் (22வது வருட) ஸ்டீவி® விருதுகளுக்கான பரிந்துரைகளை வழங்க உங்களது நிறுவனத்தை நாங்கள் அழைக்கின்றோம். குறிப்பாக, பெண்களுக்கான உலகின் முதன்மையான வணிக விருது மதிப்புமிக்க சர்வதேச வணிக விருதுகள்® மற்றும் அமெரிக்க வணிக விருதுகள்® ஆகிய நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.
உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே சமர்ப்பித்தால், எவ்வாறு தயார்செய்வது மற்றும் உங்கள் பரிந்துரைகளை சமர்ப்பிப்பது தொடர்பான அனைத்துத் தகவல்களும் அடங்கிய நுழைவுத் தகவல் பட்டியலை மின்னஞ்சலில் அனுப்புகிறோம். மிகவும் கண்டிப்பான தனியுரிமைக் காப்புமுறையை நாங்கள் பின்பற்றுவதால், எக்காரணம் கொண்டும் உங்கள் மின்னஞ்சல் முகவரி வேறு யாரிடமும் பகிரப்படாது
இந்தத் தளத்தின் இந்தப்பக்கம் மட்டுமே இந்த மொழியில் நீங்கள் காணமுடியும். நுழைவுத் தகவல்பட்டியல் உட்பட, மற்ற பக்கங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும். இதற்குக் காரணம், பரிந்துரைகள் ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், சர்வதேச அளவில் தொழில் வல்லுநர்கள் மதிப்பிடும் செயலோட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவுமே
வணிக நிறுவனத்திலுள்ள பெண்களுக்கான இந்த ஸ்டீவி விருதானது பெண் தொழிலதிபர்கள், நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உலகளாவிய சாதனைகளுக்காக வழங்கப்படுகிறது. ஸ்டீவி விருதுகளை வழங்கும் இந்த அமைப்பானது, அமெரிக்காவில் அமைத்துள்ளது. இந்த அமைப்புதான் எட்டு வெவ்வேறு ஸ்டீவி விருதுகளை தகுந்த போட்டியாளர்களுக்கு வழங்குகிறது, நீங்கள் இதைபற்றி www.StevieAwards.comஇல் அறிந்து கொள்ளலாம். இந்த ஸ்டீவி விருது கோப்பை உலகின் மிகவும் பாராட்டப்பட்ட பரிசுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
2024ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் நியூயார்க், அமெரிக்காவில் நடைப்பெற்ற ஒரு கலை நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு இந்த வணிக நிறுவனத்திலுள்ள பெண்களுக்கான ஸ்டீவி விருது வழங்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டின் வெற்றியாளர்களின் பட்டியலைக் காண இங்கு கிளிக் செய்யவும்
வணிக நிறுவனத்திலுள்ள பெண்களுக்கான விருதுகளில் பல்வேறு விருது வகைகளைத் தேர்வுசெய்யலாம். நீங்கள் பங்கேற்க வேண்டுமானால், உங்கள் நிறுவனம் எந்தச் சாதனைகளுக்கான அங்கீகாரத்தை எதிர்நோக்குகிறதோ அதற்குப் பொருத்தமான வகையினத்தைத் தேர்வுசெய்து, அந்த வகையினத்துக்கான உங்கள் பரிந்துரைகளை அறிவுறுத்தப்பட்டபடி தயாரிக்கவும். வகையினங்கள் கீழே:
- பெண்களுக்கான தனிநபர் விருது வகைகள்
- ஆண்டின் சிறந்த பெண் தொழில் முனைவர்
- ஆண்டின் சிறந்த பெண் கண்டுபிடிப்பாளர்
- ஆண்டின் சிறந்த பெண் நிர்வாகி
- ஆண்டின் சிறந்த பெண் ஊழியர்
- நிறுவனம் / அமைப்புகளின் (பெண்களுக்கு சொந்தமான அல்லது தலைமை வகித்த) விருது வகைகள்
- புதிய தயாரிப்பு மற்றும் சேவைகளுக்கான (பெண்கள் உருவாக்கிய) விருது வகைகள்
- தகவல் தொடர்பு மற்றும் சந்தை படுத்துதல் (பெண்கள் உருவாக்கிய) விருது வகைகள்
- ஊடக (பெண்கள் உருவாக்கிய) விருது வகைகள்
- சாதனை வகைகள்
ஒவ்வொரு பிரிவுகளின் பட்டியல் மற்றும் விளக்கங்கள், சமர்பிக்க தேவையானவைகள், நுழைவு காலக்கெடுகள் மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தும் முறைகள் ஆகியவை நுழைவு கிட்-இல் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளன.
வணிகத்தில் பெண்களுக்கான 2025 ஸ்டீவி விருதுகளுக்கான இறுதிப் போட்டியாளர்கள் செப்டம்பர் 19 அன்று அறிவிக்கப்படுவார்கள். பின்னர், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல ஸ்டீவி விருது வென்றவர்கள் நியூயார்க் நகரில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்படுவார்கள். விழாவில், வெற்றியாளர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல ஸ்டீவி விருது கோப்பைகள் வழங்கப்படும்.
வணிக நிறுவன பெண்களுக்கான ஸ்டீவி விருது அல்லது பிற ஸ்டீவி விருது நிகழ்சிகளில் ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
The Stevie Awards
10560 Main Street, Suite 519
Fairfax, Virginia 22030, USA
தொலைபேசி: +1 703-547-8389
தொலைநகல்: +1 703-991-2397
மின்னஞ்சல்: help@stevieawards.com